பசறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பதுளை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய பதுளை குற்றத் தடுப்புப் பொலிஸாரும், பசறைப் பொலிஸாரும் இணைந்து, பசறை, கோயில்கடை பகுதியிலுள்ள இருப்பிடமொன்றை சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதன்போது, 4,730 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், 19 மற்றும் 21 வயதுகளுடைய இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
ஒமிக்ரான் பரவலால் அழிவைச் சந்திக்கும் இலங்கை! உபுல் ரோஹண எச்சரிக்கை