Jaffna Kings அணியை வீழ்த்தியது Dambulla Giants

இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 19வது போட்டியில் Dambulla Giants அணி 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

Jaffna Kings அணிக்கெதிரான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்ற பெற்ற Dambulla Giants அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய Dambulla Giants அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் Bhanuka Rajapaksa அதிகபட்சமாக 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.

பந்துவீச்சியில் Jaffna Kings அணி சார்பில் வியாஸ்காந்த் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை  விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 130 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய Jaffna Kings அணி 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 109 ஓட்டங்களை மாத்திரமே பெற்றி 20 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *