கோதுமை மா விலையேற்றத்தால் புத்தளத்தில் பேக்கரி உற்பத்தியாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கோதுமை மா நிறுவனங்களால் பேக்கரிகளுக்கு வழங்கப்படும் கோதுமை மாவின் அளவு 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் வெதுப்பகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவிக்கின்றது.
இதனிடையே, புத்தளம் மாவட்டத்திலும் தமது உற்பத்திகளுக்கான அரைவாசி கோதுமையயே பெற்றுக் கொள்வதாக பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
நாளாந்தம் கோதுமை மாவின் விலை அதிகரிக்கின்றமையினால் தமது உற்பத்திகளைக் கூட விற்கமுடியாத நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
பேக்கரி உற்பத்திகளை பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியில் மேற்கொண்டு வருகின்றதாகவும், தரமான கோதுமை மா இல்லாமையின் காரணத்தினால் தமது உற்பத்திகளை விற்கமுடியாத நிலையில் காணப்படுவதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த அரசாங்கத்தில் பெறப்பட்ட இலாபம் கூட இந்த அரசாங்கத்தில் தற்பொழுது பெறமுடியாமல் இருப்பதாகவும் சுட்டிக் காட்டுகின்றனர்.
தாம் வங்கிகளில் நுண்கடன்களை பெற்று பேக்கரி உற்பத்தித் தொழிலை மேற்கொண்டு வருவதால் நுண்கடன்களை செலுத்துவதற்குக் கூட சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் பேக்கரி உற்பத்தியாளர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
இதனால் அரசாங்கம் தமக்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுத் தருமாறு புத்தளம் மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


