தாயக மக்களின் காணிகளை இராணுவத்திற்கு வழங்க முனைப்புக் காட்டும் வடக்கு ஆளுநர்! கஜேந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தாயக மக்களின் காணிகளை இராணுவத்திற்கு வழங்க முனைப்பு காட்டி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் காணிகளை நிரந்தரமாக ஆக்கிரமிக்க கோட்டா – மஹிந்த தலைமையிலான அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி இன்று தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை கீரிமலை ஜே.226, காங்கேசன்துறை மேற்கு ஜே.223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30 ஏக்கர் காணி நகர அபிவிருத்தி அதிகார சபையின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கான அளவீட்டு பணிகள் நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்தது. இந்த நிலையில் அளவீட்டு பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக குறித்த இடங்களில் ஒன்றுகூடி காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனால் காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டு நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *