கரிப்பட்டமுறிப்பு பகுதிக்கான குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கரிப்பட்டமுறிப்பு கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்துக்கு இன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது

இலங்கை சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் இராணுவத்தினரின் மனிதவலு மூலம் அமைக்கப்படவுள்ள சுத்திகரிக்கப்படட குடிநீர் திடடத்துக்கான அடிக்கல்லே இன்று நாட்டி வைக்கப்பட்டது

குறித்த பகுதியில் உள்ள முருகன் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற குறித்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்துக்கான அடிக்கல்லை முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படை கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சஜ வணசிங்க, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இ.றமேஸ், 642 ஆவது படை தலைமையக கட்டளை தளபதி கேணல் மேதாங்க அல்விஸ், இலங்கை சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தின் பிரதிநிதிகள் நாட்டி வைத்தனர்

நிகழ்வில், இராணுவ அதிகாரிகள் கிராம அலுவலர் உள்ளிடட அரச அதிகாரிகள், இலங்கை சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தின் பிரதிநிதிகள், கிராம மக்கள் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

தாயக மக்களின் காணிகளை இராணுவத்திற்கு வழங்க முனைப்புக் காட்டும் வடக்கு ஆளுநர்! கஜேந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *