பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் இரண்டாம் வருட பூர்த்தியை முன்னிட்டு இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் அமைந்துள்ள ஞானோதயா வித்தியாலயத்தில் இந்த இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனாத் தொற்று மற்றும் திடீர் விபத்துகள் ஏற்படுகின்ற நிலையில் தேவைப்படுகின்ற இரத்த தேவையை பூர்த்தி செய்யும் முகமாக குறித்த இரத்த தானம் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

கரிப்பட்டமுறிப்பு பகுதிக்கான குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி வைப்பு