வவுனியாவில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்

கொழும்பு – கொட்டாஞ்சேனை வட்ட லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீலஸ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தின் ஒழுங்கமைப்பில் மாபெரும் இலவச மருத்துவமுகாம் நாளை நடைபெறவுள்ளது.

குறிப்பாக இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்குதல், இலவச நீரிழிவு நோய் பரிசோதனை, இலவச இரத்த அழுத்தப்பரிசோதனை ஆகிய சேவைகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

குறித்த மருத்துவ முகாம் ஆலயத்தின் கலாசார மண்டபத்தில் நாளை காலை 8.30 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது.

மேற்படி சேவைகளை பெறவிரும்புவோர் ஆலயத்தில் தமது விபரங்களை பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் இரத்ததான நிகழ்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *