வடமராட்சி புற்றளை மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் பயிலும் மாணவர் ஒருவரை சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 200 தடவைகள் தோப்புக்கரணம் செய்யுமாறு சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்க மூவர் கொண்ட விசாரணைக்குழுவை வடமாகாண கல்வித் திணைக்களம் நியமித்துள்ளது.
இச் சம்பவத்தில், மாணவன் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். எனினும் பெற்றோர் பாடசாலைக்குச் சென்றபோது, மாணவனை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு உட்படுத்துமாறு பாடசாலை அதிபர் கேட்டிருந்த நிலையில், மாணவன் பருத்தித்துறை வைத்தியசாலையில் இன்று காலை சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து, மாணவனை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
30 வயது பெண்ணிற்கு திருமண தொல்லை கொடுத்த 70 வயது முதியவர் விளக்கமறியலில்: யாழில் சம்பவம்!