நகுலேஸ்வர ஆதீன கர்த்தா இராஜராஜ ஸ்ரீ.நகுலேஸ்வரக்குருக்களுக்கும், இணுவில் தர்ம சாஸ்தா குருகுல அதிபர் சிவஸ்ரீ தானு மஹாதேவக் குருக்களுக்கும் ‘சிவாகம கலாநிதி’ எனும் சிறப்பு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
திருக்கைலாயப் பரம்பரைத் தருமை ஆதீனம், நட்சத்திர குருமணிகள், ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் சிறப்புக் கௌரவத்துடன் ‘சிவாகம கலாநிதி’ எனும் சிறப்பு பட்டம் தருமையாதீனத்தினால் நகுலேஸ்வர ஆதீன கர்த்தா இராஜராஜ ஸ்ரீ.நகுலேஸ்வரக்குருக்களுக்கும் இணுவில் தர்ம சாஸ்தா குருகுல அதிபர் சிவஸ்ரீ தானு மஹாதேவக் குருக்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்திய துணைத்தூதர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனால் இந்த விருதுக்கான பட்டயமும் தங்கப்பதக்கங்களும், பொற்கிளியும் அவர்களுக்கு அவர்களது இல்லங்களில் வைத்து வழங்கப்பட்டது.

