வவுனியா அண்ணாநகர் பகுதியில் ஏணைக் கயிறு கழுத்தில் இறுகி நான்கு வயது பெண் குழந்தை ஒன்று பலியாகியுள்ளது.
குறித்த குழந்தை ஏணையில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக அதன் கயிறு கழுத்தில் இறுகியதில் குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
ஆயினும் குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்றையதினம்(18) மரணமடைந்தது.
Advertisement
சம்பவத்தில் பரமேஸ்வரன் அருட்சிகா என்ற நான்குவயது குழந்தையே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.