தெமட்டகொட- ஆராமய வீதியில் கேரள கஞ்சாவுடன் நேற்று (17) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெமட்டகொட பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், கைதான நபரிடமிருந்து 02 கிலோ 25 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை தெமட்டகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.