
கொரோனாத் தடுப்பூசிகளை பெறுவது கட்டாயமாக்கப்படவில்லை. அவ்வாறு எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
18 வயதுக்குட்பட்டவர்கள் கொரோனாத் தடுப்பூசியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்றுகூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நேற்று இடம்பெற்றது. இதன்போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் சட்டப் பிரதிநிதி இந்தத் தகவலை நீதிமன்றுக்கு அறிவித்தார்.
தடுப்பூசியைப் பெற விரும்பும் எந்தவொரு நபரும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பாக கட்டாய விதிமுறைகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் சட்டப் பிரதிநிதி மேலும் தெரிவித்தார்.