கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேம்படுகேணி பிரதேசத்தில் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் மக்கள் பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
வேம்படுகேணி பிரதேசத்திற்கு வேறு பிரதேசங்களில் இருந்துவரும் வெள்ள நீர், தமது கிராமத்தில் தேங்கி நிற்பதாகவும் அந்த நீர் வெளியேற வடிகால் ஒன்று அமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்த போதும் இதுவரையில் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ள நீர் தேங்கி நிற்பதனால் முதலைகள் வருவதாகவும், இதனால் அச்சமாக உள்ளதெனவும், பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக கமநல சேவைகள், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம், பிரதேச சபை உள்ளிட்ட அரச காரியாலயங்களுக்கு தெரிவித்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.