யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு கட்டளைத் தலைமையகத்தின் 27வது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ். செனரத் யாபா சகல மத வழிபாட்டுடன் சம்பிரதாய பூர்வமாக பதவியேற்றார்.
குறித்த பதவியேற்ப்பு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்போது இராணுவ அணிவகுப்பும் இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.
அவர் கடமையேற்கும்போது பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தின் முன்னால் மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.
தொடர்ந்து மறைந்த இராணுவ விரர்களை நினைவு கூரும் முகமாக மலர் அஞ்சலியினைச் செலுத்தியதுடன் அனைத்து இராணுவ அதிகாரிகள் முன்னிலையிலும் தனது ஆரம்ப உரையினை வழங்கியிருந்தார்.
இந் நிகழ்விற்கு படைத் தளபதிகள், முன் பராமரிப்பு பிரதேசம் (வடக்கின்) தளபதி, படைப்பிரிவுத் தளபதிகள், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.