திருகோணமலை – மொரவௌ பிரதேசத்தில் கஞ்சா போதைப் பொருட்களுடன் இரண்டு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் பன்குளம் இராணுவ முகாமில் கடமையாற்றி வருபவர்கள் எனவும், 25 மற்றும் 30 வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரவௌ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இராணுவ வீரர்கள் பயணித்த முற்சக்கர வண்டியை சோதனையிட்டபோது, கஞ்சா போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.