நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்தனர்.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,734 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து மேலும் 343 பேர் பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றிலிருந்து பூரணமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 47 ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில, நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 78 ஆயிரத்து 439 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.