கொழும்பு கொட்டாஞ்சேனை வட்ட லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் பூந்தோட்டம் அருள்மிகு லமி சமேத நரசிங்கர் ஆலயத்தின் ஒழுங்கமைப்பில் மாபெரும் இலவச மருத்துவமுகாம் இன்று இடம்பெற்றது.
குறித்த மருத்துவ முகாம் ஆலயத்தின் கலாசார மண்டபத்தில் காலை 8.30 மணிமுதல் மாலை 5 மணிவரை இடம்பெற்றது.
இதன்போது, இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்குதல், இலவச நீரிழிவு நோய் பரிசோதனை, இலவச இரத்த அழுத்தப்பரிசோதனை ஆகிய சேவைகளை பொதுமக்கள் பெற்றுக்கொண்டனர்.
குறித்த மருத்துவ முகாமில் பெருமளவானோர் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



