நாட்டில் ஒமிக்ரான் தொற்றுடன் மேலும் பலர் அடையாளங்காணப்படலாம் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்ஜித் படுவன்துடாவ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்த பிறழ்வு மிகவும் வேகமாக பரவக்கூடியது. இதுவரை நாட்டில் நால்வர் ஒமிக்ரான் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
ஆகவே, ஒமிக்ரான் தொற்றாளர்கள் நாட்டில் இருக்கக்கூடும் என்பதை இதனூடாக அறிந்துகொள்ள முடிகின்றது.
பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதன் மூலம் ஒமிக்ரான் வைரசை எதிர்கொள்ளும் திறன் 75 வீதத்திற்கும் அதிகமாக காணப்படுகின்றது.
இதன்காரணமாக பூஸ்டர் தடுப்பூசிகளை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் வவுனியாவில் இலவச மருத்துவ முகாம்