கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் அ.த.க பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையான மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
இந்நிலையில், இவர்களுக்கான கண் பரிசோதனை கடந்த 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
370 மாணவர்கள் கல்வி கற்றுவரும் இப் பாடசாலையில், பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நாளன்று 320 மாணவர்கள் சமுகமளித்துள்ளனர்.
இவர்களுக்கான கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 71 மாணவர்களுக்கு கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அதிக தொலைபேசி பாவனை காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
71 மாணவர்களும்இன்றையதினம் மேலதிக கண்பரிசோதனைக்காக அழைக்கப்பட்டு அவர்களுக்கு கண்ணாடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஒமிக்ரான் தொற்றுடன் மேலும் பலர் அடையாளங்காணப்படலாம்! வைத்திய நிபுணர் ரஞ்ஜித் எச்சரிக்கை