கொழும்பு – மருதானை தேவானம்பிய திஸ்ஸ மாவத்தையில் இரண்டு வீடுகளில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் இரண்டு தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீ காரணமாக இரண்டு வீடுகளில் இருந்து பொருட்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.
ஒரு வீட்டில் மேல் மாடியில் தீப்பரவியுள்ளதுடன் காலையில் வேலைக்கு செல்லும் போது விளக்கேற்றி விட்டு சென்றதாகவும் அதன் மூலம் இந்த தீ பரவி இருக்கலாம் என வீட்டில் இருப்பவர்கள் கூறியுள்ளனர்.
இந்த தீ அடுத்த வீடு வரை பரவி சென்றுள்ளது. எவ்வாறாயினும் இந்த தீயில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
நாட்டில் ஒமிக்ரான் தொற்றுடன் மேலும் பலர் அடையாளங்காணப்படலாம்! வைத்திய நிபுணர் ரஞ்ஜித் எச்சரிக்கை