நாடு முழுவதும் மருந்தகங்களில் தற்போது அத்தியவசியமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவருகிறது.
இருதய நோய், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், நீரிழிவு, நோய் எதிர்ப்புசக்தி மருந்து உட்பட அத்தியாவசிமான சுமார் 200 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டிற்குள் காணப்படும் டொலர் நெருக்கடி மாத்திரமல்லாது அரச மருந்துக் கூட்டுத்தாபனத்திற்குள் காணப்படும் மோதலான நிலைமைகள் இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.