வவுனியா, நெடுங்கேணி பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சமையலறையில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நெடுங்கேணி, சேனைப்பிலவு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மாமடு கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் சமையலறையில் இருந்த எரிவாயு அடுப்பு திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனை அவதானித்த வீட்டார் உடனடியாக எரிவாயு சிலிண்டரை அடுப்பில் இருந்து அகற்றி வீட்டிற்கு வெளியே கொண்டு சென்றதுடன், நீரினை விசிறி தீயினைக் கட்டுப்பாட்டுகுள் கொண்டு வந்தனர்.
இதனால் வீட்டில் உள்ள எவருக்கும் பாதிப்பு ஏற்படாதபோதும், சமையலறையில் இருந்த சில பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
இச் சம்பவம் தொடர்பில் நெடுங்கேணிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
