மூதூர் – சேனையூர் கிராமத்திற்குள் நேற்றிரவு சனிக்கிழமை காட்டு யானைகள் உட்புகுந்து சேதம் விளைவித்துள்ளதாக கிராம மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இதன்போது வீடொன்றின் கதவினை யானை உடைத்து சேதப்படுத்திவிட்டு அறைக்குள் இருந்த நெல்லினை இழுத்து சாப்பிட்டுச் சென்றுள்ளது
இதில் வீட்டின் இரும்புக் கதவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.மேலும் கிராமத்திற்குள் நுழைந்த யானைகள் மரவெள்ளி,தென்னை உள்ளிட்ட பயிரினங்களையும் முறித்து சேதப்படுத்தி துவம்சம் செய்துள்ளதாக பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர் .
தமது கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதாகவும் வீடுகளில் சிறுபிள்ளைகளை வைத்துக் கொண்டு இருப்பதிலும் அச்சமாக உள்ளதாகவும் சேனையூர் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை யானைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக கூறியும் இன்னும் எதுவுமே நடக்கவில்லையெனவும் சேனையூர் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.