
ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இலங்கையில் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ள நால்வரில் மூவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் என சுகாதார அமைச்சின் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்படவில்லை என்பதால், அவர்களை தீவிர கிசிச்சை பிரிவில் அனுமதிக்கவேண்டிய தேவை ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஒமிக்ரோனை தவிர்ப்பதற்கு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.