இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய ரோலர் மீன்பிடி படகுகளில் பயணித்த 43 இந்திய மீனவரை நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சீனத் தூதுவர் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு திரும்பிய தினத்திற்கு மறுநாள் இவ்வாறு கைது நடவடிக்கை இடம்பெற்றமை இந்தியத் தரப்பில் கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மீனவர்களின் 6 படகுகளிலும் மொத்தமாக 43 மீனவர்கள் இருந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் தற்போது காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுவதனால் அனைவரும் கைது செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தென்னரசு, லியோன், பீட்டர், கருப்பைய்யா,பினால்டன் ஆகியோர் செலுத்திச் சென்ற படகுகளே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட படகுகளில் 5 படகுகள் மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு படகொன்றும் தற்போது கொண்டு வரப்படுகின்றது.