துயர் பகிரும் ஒலி அஞ்சலி ஓசை எனும் 26 இல் செங்கடலே இசைத்தட்டு வெளியீட்டு விழா 2021 நேற்று இடம்பெற்றது.
வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டு கழக மைதானத்தில் கலை ஊக்கி நிறுவன தலைவர் க.அன்ரனி றொபின்சன் தலைமையில், நேற்று சனிக்கிழமை பிற்பகல் 7:00 மணியளவில் குறித்த விழா இடம் பெற்றது.
இதில் மங்கல விளக்குகளை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி,கட்டைக்காடு பங்குதந்தை வணபிதா பீட்டர் எல்மோ, வெற்றிலைக்கேணி நாகதம்பிரான் ஆலய பிரதம குரு ச.யோகசம்மந்தக் குருக்கள் உட்பட பலரும் ஏற்றி வைத்தனர்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினரான பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா , வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகர மூர்த்தி உட்பட்ட அதிதிகள் எ.ராசன் என்பவருக்கு முதன்மை பிரதியை வழங்கி வைத்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் சண்முகநாதன், கிருபா சாரதி பயிற்சி பாடசாலை அதிபர் அ.கிருபாகரன் கலந்து கொண்டனர்.
மேலும் கௌரவ விருந்தினர்களாக. பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்களான சி.பிரசாத், வே.பிரசாந்தன், வி.றஜிதா, சி.தியாகலிங்கம், பொ.பிறேமதாஸ்,
பொதுச் சுகாதார பரிசோதகர்களான பா.கிசோக்குமார்,யோ.வசீகரன், சுனாமி ஏற்பாட்டு குழு தலைவர் இ.ஜெயரஞ்சன் ஆகியோர் உட்பட பலர் அதிதிகளாக கலந்து கொண்டு 26 செங்கடலே துயர் பகிரும் ஒலி அஞ்சலி ஓசை எனும் இறுவட்டை வழங்கி வைத்துள்ளனர்.
இச் சிறப்பு அதிதிகளுக்கான இறுவட்டுக்களும் ஏற்பாட்டாளர்களால் வழங்கி வைக்கப்பட்டன.இதில் ஆறு பாடல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டன.
இப் பாடல்களை வடமராட்சி கிழக்கு பாடலாசிரியர்கள், பாடகர்கள், கவிஞர்கள் கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.