புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் காணிப்பிணக்குகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை நடைபெற்றுள்ளது
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் காணிப்பிணக்குகள் காணப்படும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலான கலந்தாய்வு கூட்டம் ஒன்று நேற்று மாலை 3.00 மணியளவில் இடம்பெறுள்ளது.
குறித்த கலந்துரையாடல், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன் போது வேணாவில் பகுதியில் கடந்த காலத்தில் காணி வேண்டி போராட்டம் மேற்கொண்ட 20 குடும்பங்களுக்கு காணியும் வீட்டுத்திட்டமும் வழங்கும் நடவடிக்கை பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருவதாக கிராம மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் மற்றும் காணிப்பகுதி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.