கிரான் – முறுத்தானை கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது ஹியூமெடிக்கா நிறுவனத்தினால் முறுத்தானை கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு தலா 2400 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, ஹியூமெடிக்கா நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் எஸ்.நல்லசிங்கம், அமைப்பின் பிரதி நிதிகள், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முறுத்தானை கிராமம் மிகவும் கஷ்டப் பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது