விது நம்பிக்கை நிதியத்தின் 17ஆவது ஆண்டு நிறைவு விழாவும், சைகை மொழி காணொளி வெளியீட்டு நிகழ்வும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று காலை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மண்டபத்தில் விது நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் விஜிதா நாகேந்திரம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, சைகை மொழி காணொளி வெளியீடு, விருந்தினர் கௌரவிப்பு என்பன இடபெற்றுள்ளது.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, வடக்கு மாகாண உதவிக் கல்விப்பணிப்பாளர் (விசேட கல்வி) வி.விஸ்ணுகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.



