முருத்தெட்டுவே தேரரிடம் இருந்து விருதுகளை பெற மறுத்த கொழும்பு பல்கலை மாணவர்கள்! வைரலாகும் காணொலி!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடம் இருந்து பட்டமளிப்புக்கான விருதுகளை பெற மாணவர்கள் மறுத்துள்ள காணொலி தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உப வேந்தரமாக நியமிக்கப்பட்டமையாது, ஒரு அரசியல் நியமனம் என்ற காரணத்தினால், அதனை பகிரங்கமாக எதிர்க்கும் வகையில் மாணவர்கள் இதனை செய்துள்ளனர்.

கொழும்பு நாராஹென்பிட்டி அபயராம விகாரையின் விகாரதிபதியான முருத்தெட்டுவே ஆனந்த தேரரை கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர உதவியதன் காரணமாக தாம் அவருக்கு இந்த பதவியை வழங்கியதாக ஜனாதிபதி பகிரங்கமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், உப வேந்தர் பதவிக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தகுதியற்றவர் என பல்கலைக்கழகங்களை சேர்ந்த கல்வியாளர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

43 பேரின் விடுதலையை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *