அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கம்பஹா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனவே, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது சகல பிரஜைகளின் பொறுப்பாகும் எனவும் அவர் தெரிவித்தார்.