வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் உதவிப்பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
குறிப்பாக 25 கற்பிணித் தாய்மாருக்கு உலருணவு பொதிகள் வழங்கப்பட்டதுடன், பார்வை குறைபாடுகள் உள்ள 50 பேருக்கு மூக்குக் கண்ணாடிகளும், ஊனமுற்றவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கர்ப்பிணி தாய்மாருக்கு மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டது.
குறித்த நிகழ்விற்கான நிதி அனுசரணையை 1982ஆம் ஆண்டு பிறந்து முகநூலில் ஒன்று சேர்ந்த உறவுகளால் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் 56ஆவது இராணுவ படையணியின் கட்டளைத்தளபதி சமன் லியனகே, 562ஆவது படைப்பிரிவின் தளபதி சேனக பிரேமரட்ண, பயனாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

