குருநாகல் பகுதியில் பெற்ற குழந்தையை விற்று, அந்த பணத்தில் போதைப்பொருள் வாங்கிய பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குழந்தையை ஏழு இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குருநாகல் நகரிலுள்ள சட்டத்தரணி ஒருவரின் ஊடாக, கடிதமொன்றை கையெழுத்திட்டு, அநுராதபுரம் பகுதியிலுள்ள தம்பதிகளுக்கு குழந்தையை கையளித்துள்ளனர்.
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்ணொருவரின் கை பையிலிருந்து குழந்தையொருவரின் ஆடைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆடைகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே, குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.
அத்துடன் குழந்தையை விற்பனை செய்த பணத்தில் 30,000 ரூபாவிற்கு போதைப்பொருளை கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எஞ்சிய 6,70,000 ரூபா பணத்தை வங்கியில் வைப்பிலிட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகியது!