கிளிநொச்சி – தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, புளியம்பொக்கனை வண்ணத்தியாறு பகுதியில் அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணல் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படட நான்கு உழவு இயந்திரங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள், உழவு இயந்திரங்களுடன் தருமபுரம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டனர்.
சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பான மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது!