அதிவேகமாக நுரையீரலுக்குள் செல்லும் ஒமிக்ரோன் – டெல்டாவை விட 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது!

டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஒமிக்ரோன் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹொங் கொங் பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்விலேயே இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் இலங்கை உள்ளடங்களாக பல்வேறு நாடுகளில் பரவி வருகின்றது.

இதன்காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் டெல்டா வகை கொரோனா வைரஸினை விட ஒமைக்ரான் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது எனவும், டெல்டாவை விட மிகவும் குறைவான உடல் பாதிப்பையே ஒமிக்ரோன் ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதிவேகமாக நுரையீரலுக்குள் செல்லும் ஒமிக்ரோன் வைரஸ் டெல்டாவை விட மிக குறைவான அளவில் நுரையீரல்களை தாக்கும் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *