முருத்தெட்டுவே ஆனந்த தேரரிற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்டுள்ள எதிர்ப்பை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்;டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின்போது முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடமிருந்து விருதுகளைப் பெறுவதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், பல்கலைகழக மாணவர்களின் நடவடிக்கைகளை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். அவர்களின் நடவடிக்கை குறித்து மதிப்பை வெளியிட்டுள்ளனர்.
அரசாங்கம் பொதுமக்கள் தங்களை எதிர்ப்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
அனைத்து மத தலைவர்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், பல்கலைகழக மாணவர்களின் நடவடிக்கையை கருத்தில் கொள்ளவேண்டும்.
ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகள் எப்போதும் கேள்விக்கு உட்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
