நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை சமாளிப்பதற்கு வெளிநாடுகள் மூன்றிடமிருந்து கடனுதவி பெறுவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
சீனா, ஜப்பான், ரஸ்யா ஆகிய நாடுகளிடமிருந்து இத்தகைய கடன்களை பெறுவதற்கு எதிர்பார்க்கிறது.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா 1,400 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக நிதி அமைச்சர், இறுதியாக இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளார்.