கிளிநொச்சி – அம்பாள்நகர் பகுதியில், 4 வயது சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
டசிந்தன் சன்சிகா என்னும் 04 வயதுடைய சிறுமியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில், விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமற்போன நிலையில் தேடப்பட்டுள்ளார்.
சிறுமியை உறவினர்கள் மற்றும் அயலவரின் உதவியுடன் தேடி வந்த நிலையில், வீட்டு கிணற்றினை நீர் பம்பியில் மூலம் இறைத்துள்ளனர்.
இதன்போது, குறித்த சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக அடையாளம் காணப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் உடல் பிரேத பரீசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எரிவாயு விநியோகம் தொடர்பாக உரிய நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்குமாறு உத்தரவு!