யாழ். பல்கலை பெரும்பான்மையின மாணவர்கள் இடையே மோதல்: 5 பேர் வைத்தியசாலையில்!

யாழ். பல்கலைக்கழக பெரும்பான்மையின மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ். பால்பண்ணை பகுதியிலுள்ள விடுதியில் இன்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விடுதியில் சில பல்கலைக்கழக இளைஞர்கள் ‘பார்டி’ ஒன்றில் கலந்துகொண்டவேளை, ஏற்பட்ட மோதலில் 5 இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த 5 இளைஞர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வனியாவில் யானை தாக்கி இளைஞரொருவர் பலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *