யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி, மூன்று நாட்;களின் பின் இன்று உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் – கொட்டடியைச் சேர்ந்த 63 வயதுடைய செபஸ்ரியன் பெனடிக் ரொசாரி என்ற மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த நபர் கடந்த 16 ஆம் திகதி காலை உடல்நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும், சிகிச்சை பயனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்
அவரது உயிரிழப்புக்கு உண்ணி காய்ச்சலே காரணம் என மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.
சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தில் இரும்பு திருட்டு: இராணுவச்சிப்பாய்க்கு விளக்கமறியல்!