இன்று முதல் புதிய எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை – தரத்தைப் பார்த்து வாங்குமாறு அறிவிப்பு!

சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பான தரவுகள் பொறிக்கப்பட்ட சிலிண்டர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தரநிர்ணய நிறுவனத்தின் தரத்திற்கு அமைய ப்ரொப்பன் அளவு 30 சதவீதமாகவும் பியூட்டேனின் அளவு 70 சதவீதமாகவும் கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்ககள் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தரம் தொடர்பான தரவுகள் பொறிக்கப்பட்ட சிலிண்டர்களை கவனித்து பொதுமக்கள் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றின் அறிவுறுத்தலுக்கு அமைய சமையல் எரிவாயுவை விநியோகிக்க எரிவாயு நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *