கிறிஸ்மஸ் பயணங்களானது, ஒமிக்ரான் பரவலை அதிகரிக்கும் எனவும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும், இந்த ஒமிக்ரான் பரவல் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் அமெரிக்க சிரேஷ்ட தொற்று நோய் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் ஒமிக்ரான் வைரஸானது, அசாதாரண திறனை கொண்டமையினால், அது வேகமாக பரவும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், ஒமிக்ரான் பிறழ்வானது, உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக தொற்று நோய் விசேட நிபுணர் டொக்டர் என்டனி ஃபாசி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.