கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் ஏற்கனவே பல துன்பங்களை அனுபவித்து வரும் மக்களையும், மாணவர்களையும் ஆசிரியர் சங்கங்கள் மேலும் துன்பப்படுத்தக் கூடாது என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் எந்தவொரு அரசாங்கமும் ஆசிரியர் சங்கங்களுக்கான தீர்வை முன்வைக்க முடியதாக பட்சத்தில், தற்போதைய அரசாங்கம் அதற்காக 30 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இந்த நிலையில், அதிபர் – ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஜனவரி 22ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் பாரிய போராட்டம் முன்னெடுக்க போவதாக கூறுவது மாணவர்களின் கல்வியை இன்னும் பின்னடையச் செய்யும்.
தற்போதுள்ள கொரோனா தாக்கத்தினால் இலங்கை மட்டுமல்ல, உலகமெங்கும் பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது.
எனினும், ஆசிரியர் சங்கங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிச்சயமாக இந்த அரசாங்கம் காப்பாற்றும்.
இதனை ஏற்காமல் ஆசிரிய சங்கங்கள் செயற்படுவது மக்களையும், மாணவர்களையும் துன்பப்படுத்தும் செயலென மேலும் தெரிவித்தார்.