33 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா சுகததாச விளையாட்டரங்கில் கோலாகலமாக ஆரம்பம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்திவரும் தேசிய விளையாட்டு விழாவின் 2021 ம் ஆண்டுக்கான 33 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா, சுகததாச விளையாட்டரங்கில் நேற்று கோலாகலமாக ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது

இந்நிகழ்வு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் தமிந்த விக்ரமசிங்க தலைமையில் இடப்பெற்றது.

குறித்த ஆரம்ப நிகழ்வில் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே பிரதம அதிதியாக கலந்துகொண்டார்

இந்த நிகழ்வில் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்

அனைத்து மாவட்டங்களின் இளைஞர் யுவதிகளின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து ஒலிம்பிக் சுடரேற்றப்பட்டு 33 வேட்டுக்கள் முழங்க விளையாட்டு விழா ஆரம்பமாகி, இன்று முதல் போட்டி நிகழ்வுகள் இடம்பெற்று வருகிறது

நாட்டின் வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மாவட்டங்களின் இளைஞர் யுவதிகள் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களின் இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *