யாழில் தனது தந்தையை விட அதிக வயதுடைய ஒருவரை காதலித்து, திருமணம் செய்த யுவதி தொடர்பில் தொடர்பில் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடளித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வெளிநாடொன்றிலிருந்து திரும்பி வந்த 56 வயதான ஒருவர் ஊரில் வணிக வளாகமொன்றை திறந்திருந்தார். அதில் பணிபுரிந்த 23 வயதான யுவதியுடன் காதல் ஏற்பட்டு, திருமணம் முடித்துள்ள நிலையில் பெண்ணின் பெற்றோர் மனமுடைந்துள்ளனர்.
யுவதியும், வர்த்தக நிலைய உரிமையாளரின் காதல் தொடர்பில் அறிந்த யுவதியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அந்த யுவதியின் தந்தைக்கு 45 வயதுதான் ஆகியுள்ளது.
Advertisement
இந்நிலையில் தந்தையை விட அதிகமான வயதுடையவரை திருமணம் செய்வதிலிருந்து தடுத்து நிறுத்துமாறு, யுவதியின் பெற்றோர் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து பொலிசார் வர்த்தகரையும், யுவதியையும் அழைத்து அறிவுரை கூறியபோது அதனை ஏற்காத குறித்த ஜோடி கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.