அரசாங்கத்தின் சமகால செயற்பாடுகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இந்த வாரம் இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்களிப்பு நிச்சமற்ற நிலையில் உள்ளதென நெருங்கிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மஹிந்த தற்போது குடும்ப உறுப்பினர்களுடன் நுவரெலியாவில் உள்ள பிரதமர் மாளிகையில் தங்கியிருக்கின்றார்.
அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள கடும் மோதல், இழுபறி மற்றும் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் அமைச்சரவை திருத்தம் தொடர்பில் பிரதமர் வருத்தத்திலும், மகிழ்ச்சியற்ற நிலையிலும் இருப்பதாக தெரியவந்துள்ளது.
Advertisement
இதனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதில்லை எனவும் அதனை மட்டுப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
அதற்கமைய தனக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளும் நெருங்கிய நண்பர்கள் சிலரிடம், தான் மிகவும் சோர்வாக இருப்பதால் சற்று ஓய்வெடுக்க வேண்டும் என கூறியதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.