நிதியமைச்சர் பசில் அமெரிக்கக் குடிமகன் என்றும் அமெரிக்காவுக்கே முதல் முன்னுரிமை வழங்குவதாகச் சத்தியம் செய்துள்ளார் என்றும் லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் தெளிவான பதிலை வழங்கவில்லை என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
நாட்டில் தற்போது, நூற்றுக்கு 60 சதவீதமான குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலைமையால் நாட்டில் எதிர்கால சந்ததியினர் மந்த போஷாக் கின்மைக்கு ஆளாகும் அபாயம் காணப்படுவதாகவும், தற்போது 5 வயதுக்குக் குறைவான ஐந்து குழந்தைகளில் ஒருவர் மந்த போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்குத் தொடர்ந்து சிரமத்தை ஏற்படுத்தினால், மக்கள் பொறுமையை இழந்தால் அரசாங்கம் தோற்கடிக்கப்பட இடமுண்டு என்று அவர் தெரிவித்துள்ளார்.
எங்களின் நிதி அமைச்சர் அமெரிக்காவின் குடிமகன் என்றும் அமெரிக் காவுக்கு முதல் இடம் வழங்குவதாக அவர் சத்தியம் செய்துள்ளார். அவ்வாறான நிலைமையில் எங்களின் நாட்டுக்கு எப்படி முதல் இடம் வழங்குவார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
லங்கா சமசமாஜ கட்சியின் 86 ஆவது ஆண்டு விழாவின் போது பேரா சிரியர் திஸ்ஸ விதாரண இதனைத் தெரிவித்தார்.