விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி

உர நெருக்கடியால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளினாலேயே உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது என்றும் இதுவே மரக்கறி மற்றும் அரிசியின் விலை அதிகரிப்புக்கு காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதேவேளை இவ்வாறான நெருக்கடி நிலையின் போது அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எவ்வாறு வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொள்கின்றனர் என்றும் காவிந்த ஜயவர்தன கேள்வியெழுப்பினார்.

நாட்டின் தற்போதைய நிலைமையை ஏன் தற்போதைய அரசாங்கத்தினால் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *