மோசடியில் ஈடுபட்ட அனைவரும் தலைமறைவாகி உள்ளனர். ஆனால், மக்கள் சார்பாக உண்மையைக் கூறிய ரஞ்சன் ராமநாயக்க மாத்திரமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிடுவதற்காக இன்று காலை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்றத்திற்கு இடையிலான ஒன்றியம் கூட ஒன்பது காரணங்களுடன் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஆதரவாக உள்ளது.
எதிர்க்கட்சி என்ற வகையில் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளபோதும் அவர் இன்னும் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க திருட்டு அல்லது தவறான நடத்தைக்காக சிறைப்படுத்தப்பட்டு இருக்கவில்லை. மக்களின் உரிமைகளுக்காக அவர் முன்நின்றவர்.
சீனி மோசடி, தேங்காய் எண்ணெய் மோசடி, வெடிக்கும் எரிவாயு மோசடி, உர மோசடி என இவ்வாறான மோசடியில் ஈடுபட்ட அனைவரும் தலைமறைவாகி உள்ளனர்.
ஆனால், மக்கள் சார்பாக உண்மையைக் கூறிய ரஞ்சன் ராமநாயக்க மாத்திரமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மக்கள் சார்பான மனிதாபிமான பிரமுகராக அறியப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க, சமூக சேவைக்காக அவரை விடுவிக்குமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்ளுவதாக தெரிவித்த எதிர்க் கட்சித் தலைவர், ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக மீண்டும் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.