ஆலங்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு 50,000.00 ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனின் 2021 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு 50,000.00ரூபா பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன
துணுக்காய் பிரதேச செயலகத்தில் வைத்து குறித்த பொருட்கள் ஆலங்குளம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரிடம் வழக்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.